2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் : சதாசிவம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

உள்ளுராட்சிமன்ற திருத்தச்சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையில் உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளுராட்சி திருத்தச்சட்ட மூலத்தில் சிறுபான்மை மக்கள் நலன் குறித்து குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். அடிமட்ட மக்களின் வேலைகள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் ஊடாகவே நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் சகல இனமக்களும் நன்மைபெறுகின்ற வகையில் உள்ளுராட்சிமன்றங்களில் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும். உள்ளுராட்சிமன்ற திருத்தச்சட்ட மூலத்தில் குறிப்பிட்டுள்ள சிறுபான்மை மக்கள் தொடர்பான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நடைமுறையில் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களே அதிகமாகவுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலைமை உள்ளுராட்சி திருத்தச்சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக்கூடாது  எனவும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .