2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காளாண்கள் போன்று சர்வதேசப் பாடசாலைகளும் தனியார் கல்விக் கூடங்களும் முளைக்கின்றன:அமைச்சர் ஹெகலிய

Super User   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் மழைகாலத்து காளாண்கள் போன்று ஆங்காங்கே சர்வதேசப் பாடசாலைகளும் தனியார் கல்விக் கூடங்களும் முளைத்து வருகின்றன. இவற்றின் தரம் பற்றி யாருக்கும் கவலையில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலியா றம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று விள்ளிக்கிழமை காலை கண்டி திருத்துவப் கல்லூரி மண்டபத்தில் 'அத்தியாபண' என்ற கல்விக் கண்காட்சி மற்றும் தொழில் வழிகாட்டல் விளக்கச் செயலமர்வு என்பவற்றை ஆரம்பித்து வைத்த பின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

உயர் கல்வி வாய்ப்பை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு 'அத்தியாபண' கண்காட்சி ஒரு நல்ல வரப்பிரசாதமாகும்.

இன்றைய சமுதாயம் திசை மாறிச் சென்று கொண்டிருக்கிறது. இது விடயமாக எதிர்காலத்தில் கட்டாயம் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது விடயமாக முறையான திட்டமொன்றை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

எனவே பெற்றோர்களும் மாணவர்களும் கண்ட கண்ட பாடநெறிகள் பற்றிய விளம்பரம்  மற்றும்  சர்வதேசப் பாடசாலைகளின் கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற்றமடையாது சரியான போக்கைக் கடைப் பிடிக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அத்தியாபண போன்ற கண்காட்சிகள் நல்லவழிகாட்டியாக அமைகின்றன என்றார்.

இக்கண்காட்சி 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .