2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அக்குறணை, குருகொடை முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் துப்பாக்கிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)


அக்குறணை, குருகொடை முஸ்லிம் ஆண்கள் பாடசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு துப்பாக்கிகளை  நேற்று மாலை அலவத்துகொடை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்துக்காக மரக்கன்றுகள்  நடுவதற்காக குழிகள் வெட்டும்போது இத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

இது சம்பந்தமாக பாடசாலை அதிபர் அஹமட்  ஷாஹி,  அலவத்துகொடை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து  துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

இத்துப்பாக்கிகள் பொலித்தீன் உறையில் சுற்றப்பட்டு பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். இரு குழல் துப்பாக்கியொன்றும் ஒரு குழல் துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டதாகவும் அதிலொன்று பழுதடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை சில காலங்களுக்கு முன்னரே பொலித்தீன் உறையில் சுற்றி பாதுகாப்புக்காக புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன, பிரதி பொலிஸ்மா அதிபர் ஜயன்த கம்மன்பில ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .