2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீரேந்து பிரதேசங்களை பாதுகாப்பதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கடல் மட்டத்திலிருந்து   5000ஆம் அடிக்கு மேல் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுவதை தடைசெய்து நீரேந்து பிரதேசங்களை பாதுகாக்கப் போவதாக சுற்றாடல்த்;துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சுற்றாடலை பாதுகாப்பது சம்பந்தமான கருத்தரங்கொன்றை நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கண்டி பொல்கொல்லை  கூட்டுறவு வித்தியாலய கேட்போர்கூடத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

சுற்றாடல்த்துறை இன்று ஒரு சவாலாக அமைந்துள்ளது. சுமார் 10, 20 வருடங்களுக்கு முன்னர் குப்பைகள் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், தற்போது அது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. காலநிலை தற்போது பெரும் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. பெய்யும் மழையின் பிரமாணம் மாற்றமடைந்துள்ளது. இவைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளூராட்சிமன்றங்களுக்கு உள்ளது.

கட்டிடங்கள் எவ்வித வரையறையும் இல்லாது, கட்டப்படுவதை காணக்கூடியாதாகவுள்ளது. இதனால் பல மாடி கட்டிடங்கள் உடைந்து விழுகின்றன.  எனவே, 5000ஆம் அடிக்கு மேல் பிரதேசங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுவதை தடைசெய்து நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .