2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மல்வத்தை மகாநாயக்க தேரருடன் பிரெஞ்சு தூதுவர் சந்திப்பு

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் கிறிஸ்டின் ரொபிசோன்இன்று சனிக்கிழமை மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி அதி. வண திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி நிலைமைகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை சம்பந்தமாகவும், பிரான்ஸின் தூதுவர் மகாநாயக்க தேரருடன் கலந்தாலோசித்துள்ளார்.

இலங்கையின் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதாக மகாநாயக்க தேரர் பிரான்ஸின் தூதுவரிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ந்தும் பிரான்ஸ் அரசாங்கம் உதவும் என்று தூதுவர் இஙகு குறிப்பிட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .