2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பள கூட்டு ஒப்பந்தம், தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும்: மனோ

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் அம்சங்களை கொண்ட ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின்  தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் அமைத்துள்ள மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான மனோ கணேசன் மற்றும்  சதாசிவம் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளனர்.

இங்கு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவிதுள்ளதாவது, 'மார்ச் 17ல் தேர்தல் வருகின்றது. மார்ச் 30ல் தற்பொழுது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் காலாவதி ஆகின்றது. உண்மையிலேயே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் உள்ளுராட்சி தேர்தலைவிடஇ இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கையெழுத்திடப்படும் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தமே நமக்கு முக்கியமானதாகும்.

தேர்தல் முடிந்து, 13 நாட்களில் இன்று நடைமுறையில் இருக்கும் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகின்றது என்பதை மனதில்கொண்டு தொழிலாளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் கட்சி பேதங்களை மறந்து, சங்க பேதங்களை மறந்து சம்பள பிரச்சினையை தொழிலாளர்கள் முன்னெடுக்கவேண்டும். இதனாலேயேதான் நானும், நண்பர் சதாசிவமும், மலையக தமிழ் கூட்டமைப்பை அமைத்திருக்கின்றோம்.

எமது கூட்டமைப்பின் மூலமாக இந்த தேர்தலில் பிரதான பிரசார பொருளாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்வைத்திருக்கின்றோம். தோட்டத் தொழிலாளர்கள் கட்டாயமாக 75 விகிதம் அதாவது சுமார் 18, 19 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த உடன்படிக்கையில் இருக்கின்றது.

பிள்ளைகளின் படிப்பு, மருத்துவம், குடும்ப நிகழ்வுகள் காரணமாக தொழிலாளர்களுக்கு மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வேலைக்கு வரமுடியாமல் போகின்றது.

அதேபோல் 18 கிலோ கொழுந்து கட்டாயமாக எடுத்துவரவேண்டும் என்ற நிபந்தனை இருக்கின்றது. இன்று தோட்டங்கள் பராமரிக்கப்படாத காரணத்தினாலும்இ காலநிலை காரணமாகவும் இந்தளவு கொழுந்து பறிப்பதற்கு பெண் தொழிலாளர்களால் முடியாமல் போகின்றது.
 
தோட்டத் தொழிலாளர்களுக்கு 405 ரூபாய் சம்பளம் என்று சொல்லப்பட்டாலும்இ உண்மையிலே அவர்களுக்கு கிடைப்பது 285 ரூபாய் மட்டுமே. வேலைக்கு வருகை தரும் நாட்களின் அடிப்படையிலான 90 ரூபாவும், 18 கிலோ கொழுந்து எடுக்கவேண்டிய நிபந்தனையின் அடிப்படையிலான 30 ரூபாவும் பெரும்பாளான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.

கர்ப்பமடையும் பெண்களுக்கு தொழில் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 15 நாள் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளத்துடன் வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை.

இதுபோன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதகமான அம்சங்களை உள்ளடக்கியதுதான் பொருந்தோட்ட சம்;பள உடன்படிக்கையாகும். இத்தகைய மோசடி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க முடியுமா? என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .