2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொட்டியாக்கலை தோட்ட தொழிலாளர்களின் பணி நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொட்டியாக்கலைத் தோட்டத்தொழிலாளர்களின் பணி நிறுத்தப்போராட்டமானது, தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.

ஆண்தொழிலாளர்களுக்குரிய தொழிலை வழங்காமல் தொடர்ந்து கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுமாறு தோட்ட நிருவாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இத்தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் கடந்த 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் பணி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கொட்டியாக்கலைத் தோட்ட நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது குறிப்பிடத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கேற்ப ஆண்தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிப்பதைத் தவிர்த்து ஏனைய தொழிலினை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் முன்வந்த போதும் குறிப்பிட்ட தொழிலாளர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து தொழிலுக்குச் சமுகம் தரவில்லை என்று கொட்டியாக்கலைத் தோட்ட நிருவாகத்தினைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தோட்ட நிருவாகத்தினருக்கும் தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது வாரத்தில் ஆண்தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு சில்லரை வேலைகளை வழங்குவதற்கும் ஏனைய நாட்களுக்கு கொழுந்து பறிக்கும் வேலையை வழங்குவதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டதை அடுத்து தோட்டத்தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .