2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொகவானத் தோட்டத்தொழிலாளர்களின் பணி நிறுத்தம் முடிவு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவை பொகவானத் தோட்டத் தொழிலாளர்களினால் கடந்த 19ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த பணி நிறுத்தப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று 24ஆம் திகதி  முதல் தமது வழமையான தொழிலுக்குச் சென்றனர்.

பொகவான தோட்டத்தில் கடந்த 19ஆம் திகதி தேயிலை நாற்றுமேடையில் தொழில் புரிகின்ற தொழிலாளி ஒருவரை அந்தத் தோட்டத்தைச்சேர்ந்த உதவித்தோட்ட அதிகாரியும் தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொழிலாளியும் தோட்ட உதவி அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளியைத் தாக்கியவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறு கோரி பொகவானத் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் கடந்த 19ஆம் திகதி முதல் பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையில் ஹட்டன் தொழிற்திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று வியாழக்கிழமை முதல் மீளவும் தொழிலுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .