2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பௌத்தமதத்தை பாதுகாத்து போஷிப்பது அரசின் கடமை கடமை: பிரதமர்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பௌத்த மதத்தை பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பாரிய கடமையென்றாலும், ஏனைய மதங்களையும் அழித்துவிட முடியாதென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

கண்டி தலாத்துஒயா கொஸ்ஹின்ன விஹாரையின் புனித அரச மரத்தைச் சுற்றி 15 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்கவேலியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

1815ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம்; திகதி கைச்சாத்திட்ட மலையக ஒப்பந்தம் முதல் இன்று வரை அமுல்படுத்தப்படும் அரசியல் யாப்புக்களி;ல் பௌத்த மதத்தை பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் கடமையென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்தையும் செய்யும். இருப்பினும் எமது நாடு ஐந்து இனங்களையும் நான்கு மதங்களையும் கொண்ட நாடாகும். எனவே பௌத்த மதத்தை பாதுகாத்து போஷிப்பது அரசின் கடமையாகவிருந்தாலும் ஏனைய  சிறுபான்மையினர் பின்பற்றுகின்ற மதங்களையும் அழித்துவிட முடியாது.

அதனால் தான் நான் கூறினேன் பௌத்த மக்களை போன்று ஏனைய மதத்தவர்களும் தத்தமது மார்க்கங்களின் அடிப்படையில் பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக வளர்க்க வேண்டுமென்று. இது தவறெனவும்  இதற்கு வேறு அர்த்தங்கள் கொடுப்பதற்கும் பலர் முயற்சிக்கின்றனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .