2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் கீழ் கண்டி கிராம அதிகாரிகள் பிரிவுகளில் பொருளாதார மையங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 01 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பத்து இலட்சம் கிராமிய பொருளாதார மையங்கள் அமைக்கும் 'வாழ்வின் எழுச்சி;' திட்டத்தின் கீழ், கண்டி மாவட்டத்தின் அனைத்து  கிராம அதிகாரிகள் பிரிவுகளிலும்  குறைந்தது ஒரு கிராம அதிகாரி பிரிவிலாவது  100 கிராமிய பொருளாதார மையங்கள் அமைக்கப்படுமென கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை கண்டி பொல்கொல்லை கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட அரச அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதியின் பிரதான தேசிய வேலைத்திட்டமாக கிராமிய குடும்ப வர்த்தக மையம் விளங்குகின்றது. இதன் கீழ்  கண்டி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம அதிகாரி பிரிவிலும் குறைந்தது 100 பொருளாதார மையமாவது நிறுவ வேண்டியுள்ளது. இதற்காக ஒரு குடும்பத்திற்கும் 10,000; ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்படும். இவர்களுக்கு எந்தவிதத்திலும் பண உதவி வழங்கப்படமாட்டாது. தேவையானவை பொருட்களாக வழங்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X