2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அரசின் பொறுப்பு அதிகரிக்கும்: பிரதமர்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வரை மட்டுமே மக்களின் அங்கீகாரத்தை கொண்டிருக்கும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண குறிப்பிட்டார்.

கம்பளை உடபலாத்த பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை கம்பளை தெல்பிடியவில் உள்ள பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி பிரதமர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்...

உள்ளூராட்சி மன்றங்கள் முன்னெடுக்க வேண்டிய சேவை மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்பு மக்கள் இம்மன்றங்கள் மீதும் மக்கள் பிரதிநிதிகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கை அடிப்படையில் ஏற்படுவதாகும். மக்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகரிக்கும் அளவுக்கு அரசின் பொறுப்புக்களும் அதிகரிக்கின்றது. எனவே புதிய சபைகள் அரசியல், கட்சி பேதம் இன்றி மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .