2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கழிவு எண்ணெய் கலப்பு

Kogilavani   / 2011 ஜூன் 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள தேயிலைத்தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கலந்துள்ளதால் இந் நீரைப்பயன்படுத்துகின்றவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளனர்.

மேலும் இந் நீரில் வாழும் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

குறிப்பிட்ட தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து சுமார் 3000 லீற்றர் கழிவு எண்ணெய் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கலந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து நுவரெலியா மாவட்ட செயலாளர் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையினர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .