2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்கத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற்தொழிற்சங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட பல கலந்துரையாடலுக்கு பின்னர் நுவரெலியா மாவட்டத்தில் 13 பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்குவதற்கான  சிபாரிசினை எல்லை  மீள்நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 5 பிரதேச செயலகங்கள் உள்ளன. அவற்றில் நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை ஆகிய பிரதேச செயலகங்களைத் தலா மூன்று பிரதேச செயலகங்களாகவும் கொத்மலை, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகங்களை தலா இரண்டு பிரதேச  செயலகங்களாகவும் பிரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய கிராம சேவகர் பிரிவுகளை  ஏற்படுத்தவதற்கும் நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற்தொழிற்சங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதன்படி நுவரெலியா பிரதேச செயலகத்தினை நுவரெலியா, தலவாக்கலை, அக்கரப்பத்தனை என்று மூன்று பிரதேச செயலகங்களாகவும் அம்பகமுவ பிரதேச செயலகத்தினை அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா என்று மூன்று பிரதேச செயலகங்களாகவும் வலப்பனை பிரதேச செயலகத்தினை வலப்பனை, ராகலை, நில்தெண்டாயன என்று மூன்று பிரதேச செயலகங்களாகவும் கொத்மலை பிரதேச செயலகத்தினை நவகொத்மலை, திஸ்பன என்று இரண்டு பிரதேச செயலகங்களாகவும் ஹங்குரன்கெத்த பிரதேச செயலகத்தினை ஹங்குரன்கெத்த, பதியப்பெலல்ல என்று இரண்டு பிரதேச செயலகப்பிரிவுகளாகவும் பிரிப்பதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில் 250 தொடக்கம் 750 குடும்பங்கள் என்ற வரையறையை அடிப்படையாகக் கொண்டு புதிய கிராம அலுவலகர் பிரிவுகளும் ஏற்படுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரகாலமாக பிரதேச செயலகப் பிரிவுகள் மூலமாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட அரசியற்தொழிற்சங்க மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mbm Thursday, 17 November 2011 03:26 PM

    நான் ஒரு முஸ்லிம்! முஸ்லிம், தமிழ், சிங்களம் என எந்த இனமாக இருந்தாலும் அனைவரும் மனித இனம்! இது புரியல சில மண்ணாசை பிடித்த மரக்கட்டைகளுக்கு! இறந்தபின் புதைத்தால் அந்த ஆறடி கூட மிஞ்சாது இவர்களுக்கு! எரித்தால் சாம்பல்தான் மிச்சம்! இது கூட புரியாதா படித்த மாமேதைகளுக்கு! விட்டா சுடுகாட்டுக்கும் பட்டா போடுவார்கள் இவர்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .