2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மதுவில்லா தீபாவளிக்கான பரப்புரையை பிரிடோ முன்னெடுப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (எஸ்.சுவர்ணஸ்ரீ)
மதுவில்லா தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பில் பெருந்தோட்டப்பகுதிகளில் இவ்வருடமும் பிரிடோ நிறுவனம் பிரசார நடவடிக்கைகளில் முன்னெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தீபாவளி ஒரு ஆன்மீக ஒளிவிழாவாக கொண்டாடுவதற்கு மக்களை ஆயத்தப்படுத்தும் கலாசாரம் பொதுவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படவில்லை. மக்கள் தீபாவளி பண்டிகைக்காக வீடுகளை அலங்கரித்தல், புதிய உடைகள் பொருட்கள்  வாங்குதல் ஆகிவற்றிலும், விசேடமாக பண்டிகை  காலத்தில் மது போத்தல்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுதல் என்ற  கலாசாரமே இது வரை காணப்பட்டது.

இந்த கலாசாரத்தை மாற்றுவதற்கோ அது குறித்து மக்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவற்கோ எவரும் முன்வரவில்லை. இதனால் பரம்பரை பரம்பரையாக மக்கள் இந்த வழக்கங்களையே கைக்கொண்டு வந்திருகின்றனர். இந்த பாரம்பரியத்தை மாற்றுவதற்காக பிரிடோ நிறுவனம் 'மதுவில்லா தீபாவளி' என்னும் பரிந்துரையை ஆரம்பித்த பின்னரே தீபாவளியை ஒரு ஆன்மீக விழாவாக கொண்டாட வேண்டும் என்ற ஒரு புதிய கருத்து மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஐந்து வருடங்களாக முன்னெடுக்கப்படும் இந்த பரிந்துரை காரணமாக மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தீபாவளிப் பூஜையின் போது மதுவை ஒரு பூஜைப்பொருளாக பயன்படுத்தும் நூற்றாண்டு கால பழக்கம் படிப்படியாக மறைந்து வருகிறது. பண்டிகை நாட்களில் மது அருந்திவிட்டு சண்டைச் சச்சரவுகளில் ஈடுபடுதல், மதுவெறியில் பொது இடங்களில் விழுந்து கிடத்தல ,   வெளியிடங்களில் இருந்து பண்டிகைக்காக தமது வீடுகளுக்கு திரும்பி வரும் இளைஞர்கள் பகிரங்கமாக மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொள்ளுதல் போன்ற சம்பவங்களும் படிப்படியாக குறைந்து வருகிறன.

இந்த விடயத்தில் பிரிடோ நிறுவனம் தலையிட்ட பின்னர்  ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உற்சாகம் தருபவையாக உள்ளதால் இப் பிரசாரத்தை தொடர்ந்து பரந்த அளவில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள வேண்டுகோள் விடு;த்து வருகின்றனர். மது இல்லா தீபாவளி பரிந்துரையில்  பிரிடோ நிறுவனத்தினால நடத்தப்படும் சிறுவர் கழக சிறுவர்களும் முன்பள்ளி ஆசிரியைகளுமே முக்கிய பரிந்துரையாளர்களாக திகழ்ந்துவந்துள்ளனர்.

தீபாவளி மதுவில்லாமல் கொண்டாடப்படும் ஒரு  விழாவாகவும்  ஒரு ஆன்;மிக ஒளி விழாவாகவும்  கொண்டாடுவதற்கு மக்களை ஆயத்தப்படுத்தும் முகமாக தீபாவளி முன்னோடி பூஜைகள் நடத்தும் வழக்கத்தை பிரிடோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்தது. இதன் மூலம் மதுவில்லா தீபாவளி பிரசாரத்தில் கோயில்களையும் கோயில் பரிபாலன சபைகளையும் விசேடமாக கோயில் பூசகர்களையும் ஈடுபட வைப்பதன் மூலம் இந்த பிரசாரத்துக்கு அதிக ஆதரவை பெறலாம் என்பதை பிரிடோ நிறுவனம் கண்டுள்ளது.

இதன் காரணமாக தீபாவளிக்கு முன்னரே தீபாவளி முன்னோடி பூஜைகளை நடத்த பிரிடோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. பிரிடோ நிறுவனம் பணியாற்றும்  தோட்டங்கள்  தோறும்  சிறுவர் கழகங்களின் ஏற்பாட்டில் தீபாவளி முன்னோடி  பூஜைகளை  நடத்த ஏற்றுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பூஜைகளின் போது மது அரக்கன் உட்பட மலையக சமூகத்தை பாதித்துவரும் அனைத்து தீமைகளையும் வெல்லுவதற்கு இறைவனின் அருளை கேட்டு பூஜைகள் நடத்தப்பட இருப்பதோடு பூஜையின் போது மலையக சமூகத்திற்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தீபாவளியை ஒரு ஆன்மீக ஒளிவிழாவாக கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் சிறுவர் கழக உறுப்பினர்கள் மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

அத்தோடு பூஜைகளின் போது ஆலய பூசகர்கள் இந்தக் கருத்துக்கு முக்கியத்தும் கொடுத்து மக்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.  இதன் தொடர்ச்சியாக மது இல்லா தீபாவளி சுவரொட்டிகளை ஒட்டுதல், மது ஒழிப்பு பிரசாரம் சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஆகிவற்றை உள்ளடக்கிய பிரசுரங்களை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நேரடியாக வழங்குதல் ஆகிய பணிகளை சிறுவர் கழக உறுப்பினர்கள் முன்னெடுப்பார்கள். தொடர்ச்சியாக இந்த விடயங்களை முன்னெடுப்பதன் மூலம் மது ஒழிப்பு பிரச்சாரத்தை வலுப்படுத்தலாம் என பிரிடோ நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .