2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; மேல்கொத்மலை வான்கதவு திறப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ, ஆர்.கமலி)


நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
மேல்கொத்மலை நீரணையின் நீர் மட்டம் உயர்வடைந்ததைத் தொடர்ந்து இந்த நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டன.

இதன் காரணமாக கொத்மலை ஓயாவின் கீழ்ப்பகுதியிலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹட்டன் - கொழும்பு பிரதான பாதையில் கித்துல்கலவுக்கும் வட்டவளைக்குமிடையில் மேகமூட்டம் காணப்பட்டதால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .