2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹலால் என்பது சுத்தமான உணவாகும்: பிரதமர்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.எம். ரம்ஸீன்


ஹலாலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலாலில் ஒன்றுமே இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண  தெரிவித்தார்.

கம்பளையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கம்பளை இல்லவதுறை ரஹ்மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஜே.எம். சஹீர் தலைiயில் நடைபெற்ற புதிய கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்ததன் பின்னர் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை ஒழிக்க முற்படும் சக்திகளுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.
 
நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பட்டுள்ளது. எனவே, இச்சந்தர்ப்பத்தில்  இனங்களுக்கு மத்தியில் பகைமைகளை வளர்க்க இடமளிக்க முடியாது.

இவ்வாறான முரண்பாடுகளை உருவாக்குவதற்கு சிறு சக்திகள் முற்படுகின்றன. நாம் முஸ்லிம் சமூகத்தை சந்தேக கண் கொண்டு நோக்கக்கூடாது.   

சர்வதேசத்தின் முன்னால் இலங்கையை தண்டிக்க சில நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன. பின்லாடன் எப்படி கொலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன? நடந்தது  அவரை கொலை செய்ய யார் வந்தார்கள்  என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் இலங்கைக்கு எதிராக விரலை நீட்டப்படுகின்றது. நாம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கம் யுத்தத்தின் பின்பு வட-கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் கோயில்கள் நிர்மானிக்கவும் பள்ளிவாசல்கள் கட்டவும் உதவியுள்ளது. இதற்காக  870 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்து கொண்டார்.





You May Also Like

  Comments - 0

  • aj Saturday, 09 February 2013 01:36 PM

    உண்மையில் இந்த ஹாலால் தேவை இல்லை. அதுவும் தமிழர்கள், சிங்களவர்களுக்கு இது தேவை இல்லை. முஸ்லிம் மக்கள் அதை சாப்பிடலாம், குறிப்பட அளவு தொகை உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமே இதை செய்தால் பிரச்சினை இல்லை. இதை இவர்கள் செய்தால் எல்லா பிரச்சினையில் பெரும்பாலும் முடிந்துவிடும். அதை விட ஹாலால் சான்றிதலுக்கு பணம் கோடி கணக்கில் வசூலிப்பது ஹாலால்? அல்லது ஹராம்?

    Reply : 0       0

    M.A.A.Rasheeda Saturday, 09 February 2013 01:37 PM

    சரியாக சொன்னீர். ஹலால் என்பது சுத்தம் என்பது பொருள். எனவே சும்மா தடுமார வேண்டாம்...

    Reply : 0       0

    M.A.A.Rasheed Saturday, 09 February 2013 01:39 PM

    சரியான வார்த்தை.ஹலால் என்பது சுத்தம்.

    Reply : 0       0

    Mutabi3 Saturday, 09 February 2013 04:25 PM

    முட்டாள் தனமாக கருத்து கூறுபவர்களுக்கு.::: ஹலால் பொருளை எந்த மனிதனும் உண்ணலாம். முஸ்லிம் கட்டாயம் ஹலாலையே உண்ண வேண்டும். எந்த நுகர்வுப் பொருள் முஸ்லிம் நுகர்வோனை இலக்காய் கொண்டுள்ளதோ, அது கட்டாயம் ஹலால் உத்தரவாதம் பெற்றதாய் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சான்றிதழை பெற ஆய்வுகூட, உற்பத்திசாலை பரிசோதனைகள் நடைபெறும். இதற்கு நிர்வாக செலவு உண்டு. இதனை மேற்கொள்ள தொடர்புடைய உற்பத்தியாளர் கட்டணம் செலுத்த வேண்டும். கோடிக் கணக்காயினும் சரி, ட்ரில்லியன் கணக்காயினும் சரி ஹலால் தொடர்பாக கண்ட கண்ட கழுதைகள் கருத்துக் கூறத் தேவையில்லை. அதனை உற்பத்தியாளர் தீர்மானிக்கட்டும்.

    Reply : 0       0

    smn Saturday, 09 February 2013 07:36 PM

    இனவாதத்தை இங்கு விதைக்க முற்படாதீர்கள். சுத்தாமான பொருளை யார் வேணுமானாலும் சாப்பிடலாம். அதை அந்த மதத்தினர்தான் சாப்பிடனும் நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று அடம்பிடிப்பது எதற்கோ தெரியவில்லை?

    Reply : 0       0

    Kaneem MA Sunday, 10 February 2013 02:13 AM

    இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் "ஹலால்" தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால், இலங்கையில் உற்பத்தி (Production) செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற உற்பத்தி பொருட்களுக்கு(Products) அவசியமாகும். இன்றேல், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் என்னவாகும் என்பதை சற்று aj சிந்திக்க வேண்டும். அறிவு, விஞ்ஞான‌ பூர்வமாக சிந்தித்தால், "ஹலால்" ஆனது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை நிருபிக்க முடியும். ஏனனில் "ஹலால் (அனுமதிக்கப்பட்டது)" என்பது இறைவனின் வழிகாட்டலினால் கிடைக்கப்பெற்றதாகும். இறைவனால் அனுமதிக்கப்பட்டதாகும்.
    மேலதிக விளக்கத்திற்கு அதுகுறித்து 1 வருடம் படிக்கவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .