2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆட்சியை மாற்றுவதற்கான ஆரம்பமாக தேர்தல்களை பயன்படுத்த வேண்டும்: ரணில்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

'மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது, வசதிபடைத்தவர்களுக்கே எல்லா உதவிகளையும் வழங்கி வருகின்றது. சாதாரண மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் ஆட்சியை மாற்ற முடியாவிட்டாலும் அதற்கான ஒரு ஆரம்பமாக இந்த தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கு கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதென்றால் அது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் தான் என்பதை யாரும் மறக்க முடியாது' என்றும் அவர் நினைவூட்டினார்.

மத்திய மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ஆர்.யோகராஜன், மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான சுப்பையா சதாசிவம், எல்.நேருஜி, எல்.பாரதிதாசன், எம்.ரவீந்திரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். முன்னாள் மாநகரசபை முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான சந்தனலால் கருணாரத்ன கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அங்கு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க கூறுகையில், 'எமது ஆட்சிக் காலத்தில் உல்லாசத்துறை அபிவிருத்தி செய்யப்பட்டது. பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டது. மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீக் தேக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
 
வீட்டு உரிமைகளை கொடுத்தோம். பிரஜா உரிமை வழங்கினோம். அதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று உங்களிடம் வாக்கு கேட்கின்றார்கள். 77ஆம் ஆண்டிற்கு பின்னர் விவசாயத்துறை, கால்நடை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்.

இன்று நாடு பூராகவும் நல்ல மழை பெய்கின்றது. ஆனால் மின்சார கட்டணம் மாத்திரம் குறையவில்லை. உலகிலேயே அதிக மின்சார கட்டணத்தை செலுத்தும் ஒரே நாடு இலங்கை மட்டும்தான். அன்று மக்கள் இருட்டை கண்டு பயந்தார்கள். இன்று மக்கள் வெளிச்சத்தை கண்டு பயப்படுகின்றார்கள்.

ஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்தார்கள். அங்கு கிரக்கெட் விளையாடுவது எமது வீரர்கள் அல்ல காட்டு யானைகள். துறைமுகம் இருக்கின்றது. ஆனால் கப்பல் இல்லை. டின் மீன், பருப்பு போன்ற எல்லாவற்றிலும் ஒரு தொகை பணம் ராஜபக்ஷ கம்பனிக்கு செல்கின்றது. இதன் காரணமாகவே பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்த தேர்தலில் மக்கள் தமது எதிர்ப்பை காட்டாவிட்டால் மீண்டும் விலைவாசி உயரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தமைக்கு காரணம் எமது ஆதரவாளர்கள் தேர்தல் தினத்தன்று வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களிக்கவில்லை.

எனவே இந்த தேர்தலில் அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். இந்த வெற்றி அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எமது வெற்றிக்கு ஒரு ஆரம்பமாக அமையும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • sam Monday, 05 August 2013 07:33 AM

    இதுவே சரியான தருனம். எம் மக்கள் புத்திசாலிதனமாக வாக்களித்து நல்லதொரு எதிர்காலத்தை உருவக்குவார்கள் என நம்புகின்றேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X