2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கருப்புத்தங்க தலைவனின் மறைவு உலக நாடுகளுக்கு பேரிழப்பாகும்: வி.இராதாகிருஷ்ணன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

'உலகின் மிகச் சிறந்த கருப்புத்தங்க தலைவனின் மறைவு தென்னாபிரிக்காவுக்கு மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திற்கும் பேரிழப்பாகும் இனி. இப்படி ஒரு தேசிய தலைவன் இந்த உலகில் அவதரிப்பாரா என்பது கேள்விக்குறியே' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துரை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய மாபெரும் தலைவர் இவரைப்போன்ற அர்ப்பணிப்புடன் ஒரு சமூகத்திற்காக உழைத்த ஒருவரை இனி நாம் கான முடியாது.

மனத்துணிவு தைரியம் வீரம் தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக அதனை பற்றிபிடித்து செயல்படுகின்றமை ஆகிய பல்வேறுவிதமான திறமைகளை கொண்ட ஒரு தலைவன்.

தனது வாழ்நாளில் அதிகமான நாட்களை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து அதற்கு வலு சேர்த்தவர். சிறையில் இருந்து மீண்டு வெளியில் வந்த பின்னும் அதற்காக போராடியவர்.

போராட்டம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணம் வகுத்தவர். இவருடைய வாழ்க்கை வரலாறு சரித்திரத்தில் உயிருடன் இருக்கும்பொழுதே இடம்பிடித்துவிட்டது.

1939 ஆம் ஆண்டு 21 வயதில் கருப்பின இளைஞர்களை ஒன்றினைத்து தனது முதலாவது போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரின் போராட்டங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டபோதிலும் அதற்கு அவர் அஞ்சவில்லை. அவர் சிறையில் இருந்த பொழுது மன்னிப்பு கோரினால் விடுதலை செய்யப்படலாம் என அன்றை தென்னாபிரிக்க அரசாங்கம் அறிவித்தபோதிலும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சமாதானமும் நீதியும் அனைவருக்கும் கமனாக கிடைக்க வேண்டும என்பதில் மிகுந்த அக்கரையடன் செயற்பட்டார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பு தனக்கு இடையூறுவிளைவித்த தனக்கு எதிராக செயல்பட்ட எந்தவொரு வெள்ளை இனத்தவர்களையும் பலிவாங்க நினைக்கவில்லை. இதுதான் வெள்ளையர்களை மீண்டும் இவர்மீது திரும்பி பார்க்கவைத்தது.

தனக்கு எதிராக செயல்பட்டவர்களையும் அனைத்துக் கொண்டு முன்னோக்கி சென்றமையானதே இவரின் வெற்றிக்கும் சிறந்த தலைவன் என்ற நிலைக்கும் இவரை விட்டுச் சென்றது. இவரின் இந்த செயல்பாடுகள் எமக்கு சிறந்த பாடமாகும்.

தனிமனித போராட்டத்தின் தார்மீகத்தை உணர்த்தியவர். கருப்பு சூரியன் மறைந்து விட்டது.இ வரின் வாழ்க்கை நாம் அனைவருக்கும் சிறந்ததொரு படிப்பினையாக அமையவேண்டும்' என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .