2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்னுபகரணங்கள் விற்கும் பாணியில் பண மோசடி; இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மலையகத்தின் தோட்டப் பகுதிகளில் மின் உபகரணங்களை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்று விற்பனை செய்யும் பாணியில்,  லொத்தர் வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும்  இருவரை திங்கட்கிழமை (07) கைதுசெய்ததாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, குண்டசாலை மற்றும் குருதெனிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரையே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சில தினங்களுக்கு முன்னர் மத்துரட்ட பிரதேச தோட்டப் பகுதியொன்றுக்குச் சென்ற இவ்விருவரும்  அங்கு மின் அடுப்பொன்றை விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களின்  பின்னர் மீண்டும்  அவ்வீட்டுக்குச் சென்ற இவர்கள், கொள்வனவு செய்த மின் அடுப்புக்காக லொத்தர் சீட்டு மூலம் மோட்டார் சைக்கிளொன்று பரிசாக கிடைத்துள்ளது. இம்மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பச் செலவாக 15,000 ரூபாவை கொண்டுவருமாறும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 15,000 ரூபாவை கொண்டு சென்றவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளை  கொண்டுவந்து தருவதாகக் கூறி இவ்விருவரும்  தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸில் பாதிக்கப்பட்டவர்  முறைப்பாடு செய்த பின்னர், இச்சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விருவரும்;  சில மின் உபகரணங்களை தோட்டப் பகுதிகளுக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு மின் உபகரணங்களை  விற்பனை செய்து சில தினங்களின் பின்னர், மீண்டும் அவ்வீட்டுக்குச் சென்று  கொள்வனவு செய்த பொருளுக்கு லொத்தர் வெற்றி கிடைத்துள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள வருமாறும் அவ்வாறு வரும்போது ஆரம்பச் செலவுக்காக ஒருதொகை பணத்தை கொண்டு வருமாறும் இவர்கள் கூறி அப்பணத்தை மோசடி செய்துவந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .