2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊவா அமைச்சரவை பதவியேற்பு

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக மேலும் நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  பதவியேற்றுக் கொண்டனர்.

உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோரே பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களுடன் முதலமைச்சரான சசிந்திர ராஜபக்ஷவும் தனக்கு கீழுள்ள அமைச்சுகளுக்காக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஊவா அமைச்சரவை

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ- நிதித் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசார, சமூகநல, கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமானம்.

செந்தில் தொண்டமான் - வீதி அபிவிருத்தி, வீடு, நீர்வள மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு.

அநுர விதானகமகே - விவசாய, நீர்பாசன, விலங்கு உற்பத்தி, மீன்பிடி, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை.

சாமர சம்பத் தஸநாயக்க - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், மின்சார எரிசக்தி, சிறு கைத்தொழில் மற்றும் நுகர்வோர் விவகாரம்.

குமாரசிறி ரத்நாயக்க
- சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பாதுகாப்பு மகளிர் விவகாரம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .