2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையக ஆசிரியர் முன்னணியின் கல்வி செயற்றிட்ட கோவை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் கையளிப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

மலையக அபிவிருத்தியில் கல்வியின் பங்கு பிரதானமானது என்பதை கருத்திற்கொண்டு, மலையக ஆசிரியர் முன்னணி தனது கல்வி செயற்றிட்டம் ஒன்றை தயாரித்து அதன் கோவையை, மலையக ஆசிரியர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணனிடம் வெள்ளிக்கிழமை (30) கையளித்துள்ளது.


அத்துடன், கல்வி இராஜாங்க அமைச்சின் செயற்றிட்டத்தில், பின்வரும் செயற்றிட்டங்களை இணைத்து கொள்ளுமாறு  மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் சின்னையா இரவிந்திரன் கேட்டுகொண்டுள்ளார்.


அச்செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு,


கல்வியியற் கல்லூரி நியமனங்களை விரைவுப்படுத்தல், தொழில் வெற்றிடங்களை நிரப்புதல், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு ஆசிரிய பயிற்சி மாணவர்களை உள்வாங்கும் பொழுது மலையக தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை என்னும் பதம் நீக்கப்பட்டு மலையக வம்சாவழி பிள்ளைகளுக்கு முதல் உரிமை வழங்கப்படும் எனும் பதம் சேர்க்கப்பட வேண்டும்.


மேலும், புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டங்களின் போது ஏனைய பிரதேச மாணவர்களின் கல்வி நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்காமல், பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி நிலைமைக்கு ஏற்ப புலமைப்பரிசில்களை பெற்றுத் கொடுக்கவேண்டும். மூவாயிரம் ஆசிரிய உதவியாளர்களின் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும்.


அதவேளை, மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டங்களை பெற்றுக்கொடுக்க வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழ் பாடசாலைகள் அதிகமாக உள்ள வலயங்களில் தமிழ் வலயக்கல்வி பணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஏனைய வலயங்களில் விகிதாசாரத்துக்கு அமைவாக மேலதிக கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ், பிரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வளப்பகிர்வுகளை முறையாக பெற்றுக்கொடுத்தல்.

மஹிந்தோதய ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கப்படவேண்டும். நிலுவையிலுள்ள நியமனங்களை வழங்குதல், கல்வி அமைச்சின் கல்வி நிர்வாக சேவை நியமனத்தின் போது விகிதாசார முறைமையை பின்பற்றவேண்டும்.


பெருந்தோட்ட வீடமைப்புத்திட்டங்களில் ஆசிரியர்களையும் உள்வாங்குதல், நீண்ட காலமாக பதில்கடமையிலிருக்கும் அதிபர்களை நிரந்தர அதிபர்களாக நியமித்தல், இந்திய புலமைப்பரிசில் திட்டத்தினூடாக மலையக ஆசிரியர்களை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கலை ஆகிய பாடங்களை பயிற்றுவித்து பாடசாலைகளுக்கு நியமித்தல், மலையக பாடசாலைகளில் நிலவும் கட்டடம், தளபாடம் மற்றும் அடிப்படை சுகாதார தேவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்னும் வழங்கப்படாமல் இருக்கும்  பாடங்களுக்கான ஆசிரிய ஆலோசகர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தல்.

 

மேலும், அழகியல் பாட ஆசிரியர்களுக்கான விஷேட புலமைப்பரிசில் திட்டத்தினை ஏற்படுத்துதல், தீர்வையற்ற வாகனங்களை பெறுவதுக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுமதிபத்திரம் பெற்றுக்கொடுத்தல், அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை பெற்றுக்கொடுத்தல்;, பாடசாலைகளுக்கான சிற்றூழியர்களை நியமித்தல், உயர்தர பிரிவு பாடசாலைகளுக்கு முகாமைத்துவ உதவியாளர்களை நியமித்தல், கோட்டம் ரீதியில் ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வழங்கு நடவக்கை எடுக்க வேண்டும்.


முன்பள்ளி பாடசாலைகளுக்கு அரச அங்கீகாரம் பெற்று அவ் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்தல், ஒரே பாடசாலையில 10 வருடம் என நியமனம் பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றத்தை 8 வருடங்களாக மாற்றுதல், 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவை நடத்துதல், அம்;மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்குதல், மக்கள் தொடர்பு அதிகாரிகள் என கல்விகாரியாலயங்களில் ஒதுக்கீடு அற்ற அரசியல் நியமனத்தினூடாக இருக்கின்ற ஆசிரியர்களை கற்பித்தல் செயற்பாட்டிற்காக பாடசாலைகளுக்கு அனுப்ப நடவக்கை எடுக்க வேண்டும்.


மேலும், பாடசாலை ரீதியான வருடாந்த பொருட் பரிசீலனை செய்யும் நடைமுறையை இரு வருடங்களுக்கு ஒரு முறை என மாற்றுவதால் பெருந்தொகையான பணத்தை மீதப்படுத்த முடியும். எனவே, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை முற்று முழுதாக பாடசாலையின் பெயருக்கு மாற்றுதல் போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை தனது அமைச்சில் இணைத்துக்கொண்டு செயற்படுமாறு மலையக ஆசிரியர் முன்னணியினால் தயாரிக்கப்பட்டுள்ள செயற்றிட்ட கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .