2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது

Sudharshini   / 2015 பெப்ரவரி 03 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ


மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (03) கிறேஸ் வெஸ்டன் தோட்டம், கல்கந்தை பொது மையானத்தில் 03.45 மணியளவில் நூற்றுக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


பொலிஸாரின் பிடியிலிருந்து கடந்த சனிக்கிழமை (31) தப்பிய மாரிமுத்து மனோஜ் என்ற 21 வயது இளைஞர், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


இதனையடுத்து, அவரது சடலம் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (01) மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


பிரேத பரிசோதனையின் பின்னர், இளைஞனின் சடலம் திங்கட்கிழமை (02) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக உறவினர்களிடம் அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டது.


'சடலம் உரிய நேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பக் கூடாது.

அமைதியான முறையில் இறுதி கிரியைகளை நடத்துதல் வேண்டும்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை, பிரச்சினைகள் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .