2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெளியாட்களுக்கு காணி பகிர்ந்து கொடுத்ததை எதிர்த்ததால் பதற்றம்

Princiya Dixci   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பிரதேச மக்களை புறக்கணித்துவிட்டு  வெளியாட்களுக்கு காணியை பகிர்;ந்து கொடுத்ததால் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளங்கனில் நேற்று திங்கட்கிழமை பதற்றம் ஏற்பட்டது.  

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் கிளங்கன் தோட்ட தொழிலாளர்களும் தியசிரிகம மக்களுக்கும் சொந்தமான, கிளங்கன்,  காசல் ரீ நீர்த்தேகத்துக்கு அருகிலுள்ள 38 ஏக்கர் காணியை கிராமசேவகர் வெளியாட்களுக்கு வழங்கியுள்ளார்.    

ஹட்டன், சமனலபுற கிராமத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கும் மற்றும் வெளிபிரிவுகளை சேர்ந்த 8 பேருக்குமாக மொத்தம் 12 பேருக்கு மேற்படி காணியை கிராம அதிகாரி பிரிகொடுத்துள்ளார். ஒருகுடும்பத்துக்கு 7 பேர்ச் வீதம் இக்காணியை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமனலபுறத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மேற்படி காணிக்கு சென்று காடுகளை அழித்து கூடாரங்களை அமைத்துள்ளனர். 

மேற்படி தோட்ட மக்கள் சம்பவ இடத்துக்கு வந்ததுடன் தோட்டத்தில் வீடுகள் இல்லாது இருப்பவர்களுக்கு காணிகளை பிரித்துகொடுக்காமல் வெளியாட்களுக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியுமென கோரி முறுகலில் ஈடுபட்டனர்.  

'நாங்களும் எங்கள் சந்ததியும் 100 வருடங்களாக வீடுவசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். பரம்பரையாக வேலைசெய்து வந்த தோட்டத்தில் உள்ள காணிகளை எமக்கு பகிர்ந்தளிக்காமல் வெளிநபர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்பட போவதில்லை' என இம் மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரும் நோர்வூட் தோட்ட உதவி அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  

இதன்போது, 'தோட்டத்துக்கு சொந்தமான காணியை வெளியாட்களுக்கு பிரித்துகொடுக்க வேறு யாருக்கும் அதிகாரமில்லை.  காணி பிரித்துகொடுக்கப்பட்டது உறுதிபடுத்தப்படும்பட்சத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உதவி அதிகாரி தெரிவித்தார்.

'காணிகளை பகர்ந்தளிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். தேர்தல் முடிந்தபின் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அம்பகமுகவ பிரதேச செயலளார் எச்.எம்.சீ.ஹேரத் தெரிவித்தார்.

'இப்பிர்ச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை ஒருவரையும் இக்காணிக்குள் அனுமதிப்பதில்லை' என பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தோட்டங்களுக்குட்பட்ட இக்காணியானது காடாக காணப்பட்டுவந்துடன் இத்தோட்டங்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X