2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய வம்சாவளியினரின் நலன் கருதி 12 அம்சக்கோரிக்கைகள் முன்வைப்பு

Sudharshini   / 2015 ஜூலை 29 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பெருந்தோட்ட மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய வம்சாவளி தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, 12 அம்சக்கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்துள்ளதாக இ.தொ.கா.வின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அக்கோரிக்கைகளுக்கான தீர்வுகளை தேர்தலின் பின்னர் பெற்றுத்தருவதாக, ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

பதுளையில் திங்கட்கிழமை(27) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'சௌமியமூர்த்தி தொண்டாமன் ஐயா காலத்திலிருந்தே நாம், எமது சமூகத்தின் நலன்கருதி ஆளும்கட்சியுடனும்  ஜனாதிபதிகள் பலருடனும் நல்லுறவுகளை பேணி வந்தோம். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும்; நல்லுறவு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் மானியங்களை பெற்றுகொடுத்தல், பெருந்தோட்ட பிரிவுகள் தோறும் கிராமசேவை பிரிவுகளை அமைத்தல், அப்பிரிவுகளுக்கு தோட்ட இளைஞர், யுவதிகளை கிராம சேவையாளர்களாக நியமித்தல் உள்ளிட்ட எமது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரிச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இவை அனைத்தையும் 12 அம்சக்கோரிக்கைகளாக உள்ளடக்கியுள்ளோம்' என்றார்.

'இ.தொ.காவை பொறுத்தவரையில் நுவரெலியா வேறு, பதுளை வேறு என்று ஒருபோதும் கருதியதில்லை. நுவரெலியாவுக்கு அடுத்தப்படியாக பதுளை மாவட்டத்திலியே ஆகக்கூடியளவில் எமது மக்கள் வாழ்ந்;;துகொண்டிருக்கின்றனர்.

இ.தொ.காவின் சேவல் சின்னத்துக்கு வழங்கும் வாக்குகள் அனைத்தும் இந்தியவம்சாவளி சார் எமது மக்களுடைய வாக்குகளாகும். அவ்வாக்குகளின் தொகை மூலமே எமது சமூகத்துக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படும். இதனை கருத்திற்கொண்டு எம்மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தி கொள்ளும் வகையில் எம்மக்களினது ஒவ்வொரு வாக்குகளும் சேவல் சின்னத்தையே சென்றடைய வேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். எமது பலத்தை இத்தேர்தல் மூலம் வெளிபடுத்தியே ஆகவேண்டும். பதுளை மாவட்டத்தில் இ.தொ.கா.சார்பாக மூன்று பேர் நாடாளுமன்றத்துக்கு செல்லக்கூடிய வாயப்;பு ஏற்படுள்ளது. இவ்வாய்ப்பை எமது மக்கள் பூரணமாக பயன்படுத்திகொள்ள வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .