2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் பிரசார கூட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் இருவர் புறக்கணிப்பு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                                    

பதுளை, பசறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில், பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இருவர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை அமைப்பாளர் கே.வேலாயுதம் சனிக்கிழமை (1) ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இக்கூட்டத்துக்கு ஐ.தே.க.வின் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின வேட்பாளர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்த போதிலும் சிறுபான்மையின வேட்பாளர்களான ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அ.அரவிந்தகுமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும், இக்கூட்டத்தில் மேற்படி இரு வேட்பாளர்களுடைய பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்படிருந்தது.

எனினும், இக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர், வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் தொடர்பில் வினவியுள்ளார்.

மேலும், தனது உரையின் போது தமிழ் வேட்பாளர்களான மேற்படி இருவருக்கும் வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறும் மக்களிடம் பிரதமர் கோரியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, மேற்படி கூட்டத்தின் போது, ஐ.தே.க.வின் பசறை அமைப்பாளர் கே.வேலாயுதம் உரையாற்றிய போது அவருக்கு மக்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .