2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதவி பேராசைமிக்க அணியை எவ்வாறு ஆதரிப்பது?:தாஹீர்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

'பதவி பேராசை, ஊழல் மோசடிமிக்க அணியை எவ்வாறு ஆதரிப்பது?' என சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தாஹீர் ஹாஜியார் தெரித்தார்.

'ஜனாதிபதியாக இருந்து தோல்வியுற்றவர்கள், மீண்டும் சாதாரண நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கீழ் இறங்கி செல்லமாட்டார்கள். நான் கூட மாகாண சபையில் இருந்துவிட்டு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காகச் செல்ல மாட்டேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.

மாவனெல்லையில் நேற்று(3) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'முன்னாள் ஜனாதிபதி ஆட்சியிலிருந்திருந்தால்  சட்டம், நீதிக்கு இடமிருந்திருக்காது. நீதி, நியாயமான தேர்தலையும் நாங்கள் பார்த்திருக்க முடியாது. அடாவடித்தனங்களும்  அட்டூழியங்களும் நடந்தேறி இருக்கும். பொலிஸாரினால் சட்டத்தின் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

இப்படிப்பட்ட நீதி, நியாயமற்ற, ஊழல் மோசடிமிக்க ஆட்சியாளர்களுடன் சேர்ந்து செயற்படுவதிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பாடுப்படபோகின்றேன்' என அவர் மேலும் கூறினார்.

இதன்போது, உரையாற்றிய மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார்,

'கடந்த காலத்தில் எமது சமூகத்துக்கு எதிராக சில தீய சக்திகள்  மேற்கொண்ட அநீதிகளைப் பார்த்துக் கொண்டு பாராமுகயிருந்த ஆட்சியாளர்களுடன்  இனிமேலும் ஒட்டிக்கொண்டு இருக்க நான் தயாரில்லை.

இந்த நாட்டில் நல்லாட்சி நிலைக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பெற வேண்டும்.  எதிர்காலத்தில் எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கக்கூடிய  கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றே.

நாங்கள் எங்களுடைய வாக்கின் பெறுமதியை கவனத்தில் கொள்ளாமல் இருந்தோமேயானால், எங்களை போல பெரும் நஷ்டவாளிகள் வேறு யாரும் இல்லை' என்றார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .