2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சிவாணிஸ்ரீ

மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ்,சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

'தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு பெற்று கொடுப்பதோடு அவர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாம் போராட்டம் நடத்தி அதை பெற்றுகொடுக்க முன்னின்று செயல்படுவோம்' என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,  

'ஊழல் இல்லாத அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்களை தட்டி கேட்கக்கூடிய தகுதி, இக்கட்சிக்கு  மட்டுமே உள்ளது' என்றும் அவர் கூறினார்.

'கடந்தகால தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு இன மக்களும் என்றும் இல்லாதவாறு இன்று, மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர். இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ம.வி.மு.இன் பிரதிநிதி ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

'மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ம.வி.மு மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயாராக உள்ளது. இன,மத,மொழி,பேதங்களின்றி ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்' என அவர் அழைப்புவிடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .