2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சர்ச்சையை ஏற்படுத்திய நவீனின் கூட்டம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ  

காமினி திஸாநாயக்க மன்றத்தினால், ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை(8) நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் நவீன் திஸாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டம் நடைபெற்றுகொண்டிருந்தபோது, நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்குகள் சென்ற தேர்தல் அதிகாரிகள், இக்கூட்டம் தேர்தல் சட்டத்துக்கு முரணானது எனவும் வேட்பாளர்; நவீன் திஸாநாயக்க இக்கூட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறினர்.

எனினும் இது அரசியல் கூட்டமல்ல என தெரிவித்த வேட்பாளர், மன்றத்தின் தலைவர் என்ற முறையில் தான் தேர்தலுக்கு முன்னர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கூட்டத்தில் அமைச்சர் ஆற்றிய உரை தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

'வேட்பளர்களிடம் கடந்த காலங்களில் காணப்பட்ட மோதலான நிலைமை, தற்போது இல்லை. உண்மையான நல்லாட்சிக் காரணமாவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசியல் களம் தற்போது சூடிப்பிடித்திருந்தாலும் உண்மையான நல்லாட்சியால், இந்த மோதல் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது' என்றார்.

'ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
எந்த அரசியல்வாதியும் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவிகளில் இருந்தால், மக்கள் வெறுத்துவிடுவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X