2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்    

உள்நாட்டு விவசாயிகள் தற்போது உருளைக்கிழங்கு அறுவடையை எதிர்நோக்கி காத்திருப்பதால், இக்காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை 40 ரூபாயால் அதிகரிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம்; கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஊவா மாகாணசபை அமைச்சர் ரவீந்ர சமரவீர தெரிவித்தார்.

வெலிமடை நகரில் நேற்று (9) நடைப்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

விவசாயத்தை மையமாக கொண்டு தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் வெலிமடை பிரதேச விவசாயிகளின், பிரதான பயிர் செய்கை உருளைக்கிழங்காகும்.  எனவே,  உள்நாட்டு விவசாயிகளின் அறுவடைகளுக்கு சிறந்த சந்தை விலையை பெற்றுக்கொடுக்கவும் உள்நாட்டு விவசாயிகளின் பாதுகாப்பை  கருத்திற்கொண்டும் நாம் இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

இதில் எவ்வித அரசியல் உள்நோக்கங்களும் இல்லை. எமது கட்சியின் தலைவரே தொடர்ந்தும் பிரதமராக செயற்படவுள்ளார். இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்ககுக்கான  வரி திட்டம் அறுவடை காலத்துக்கு  முன் அமுலுக்கு வரும்' என அவர் மேலும் கூறினார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .