2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஒரு இலட்சத்து 66,854 வாக்குகள் நிராகரிப்பு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் முகமாக நடத்தப்பட்ட 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளின்படி மத்திய மாகாணத்தில் 166,854 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இதில் நுவரெலியா மாவட்டம் முன்னிலையில் உள்ளதாகவும் தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா,கண்டி,மாத்தளை

இதற்கமைவாக, நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளான 534,150 வாக்குகளில் 420,734 (78.77%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் 32788(7.79%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 379,675 வாக்குகளில் 298,917 (78.73%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் 21,537 (7.21%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில், பதிவுசெய்யப்பட்ட 1,049,160 வாக்குகளில் 830,165(79.13%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் 37,065(4.46%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஊவா மாகாணம்(பதுளை, மொனராகலை)

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 620,486 வாக்குகளில் 496,849 (80.07%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் 24,167(4.86%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 339,797 வாக்குகளில் 272,279 (80.13%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் 9,291 (3.41%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாணம்

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 810,082 மொத்த வாக்குகளில் 655,222 (80.88%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் 230,26 (3.51%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 649,878 வாக்குகளில் 518,674 (79.81%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் 189,80(3.66%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X