2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரு நாள் சம்பளம் 82/= வால் அதிகரிப்பு?

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 82 ரூபாய் 50 சதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அந்த தகவலை மறுத்துள்ளன.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 770 ரூபாவாக அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதில், அடிப்படை சம்பளம் எவ்வளவு ரூபாவினால் அதிகரிக்கப்படும், ஏனைய அதிகாரிப்புகள் தொடர்பில் எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.

பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரின் தற்போதைய அடிப்படை சம்பளம் 450 ரூபாயாகும். ஊழியர் சேமலாப நிதிக்கு 67 ரூபாய் 50 சதமும், தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவாக 30 ரூபாயும், வழங்கப்படும் வேலைநாட்களில் 75 சதவீதம் வேலைக்கு சென்றிருந்தால் 140 ரூபாயும் வழங்கப்படும். அதனடிப்படையில் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு 687 ரூபாய் 50 சதத்தை சம்பளமாக பெறுகின்றார்.

அந்த 687 ரூபாய் 50 சதத்தை சம்பளமே 770 ரூபாயாக அதிகரிக்கப்படவிருக்கின்றது.

எனினும்,  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 770 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டதாக கூறப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இப்பேச்சுவார்த்தை இன்னும் இழுபறி நிலையிலே உள்ளதாக தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளருமான எஸ்.இராமநாதன் கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தொழில் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 50 ரூபாயால் அதிகரிப்பதற்கு தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன முன்மொழிந்தார்.

தொழில் அமைச்சரின் கூற்றுப்படி, 500 ரூபாய் அடிப்படை சம்பளமும் ஏனைய கொடுப்பணவுகள் அடங்களாக நாளொன்றுக்கு 770 ரூபாய் மொத்த சம்பளமாக  தொழிலாளி ஒருவருக்கு கிடைக்கும். இதற்கு பிரதான தொழிற்சங்கங்கிள் பிரதிநிதிகளான நாங்கள் உடன்படவில்லை. இதனால் மீண்டுமொரு பேச்சுவார்த்தையை அடுத்த வாரமளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .