2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'இலங்கையில் 2016ஆம் ஆண்டில் உணவில் தன்னிறைவு'

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


'இலங்கையில் 2016ஆம் ஆண்டில் உணவில் தன்னிறைவு' என்ற இலக்கை எட்டும் நோக்குடன் விவசாய திணைக்களம் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அவற்றில் ஒன்றாக மிளகாய் உற்பத்தி தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக விவசாயத்திணைக்கள ஆணையாளர் நாயகம் கலாநிதி ரொகான் விஜேகோன் தெரிவித்தார்.

பேராதனை கன்னொறுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவசாய  உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்;ந்தும் உரையாற்றி அவர்,

'ஜனாதிபதியின் திட்டத்தின் பிரகாரம் 2016ஆம் ஆண்டு உணவில் தன்னிறைவு என்ற இலக்கை அடையும் விதத்தில் நாடு பல்வேறு கோணங்களிலும் செயற்திட்டங்களை முன்எடுக்கின்றன. இதற்கு ஒரு சிலரது பங்களிப்பு மட்டும் போதாது. சகல தரப்பும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

1970-77 நிலைமையுடன் ஒப்பிடும்போது நௌ; உற்பத்தியில் மட்டுமே குறித்த இலக்கு அடையப்பட்டுள்ளது.

சுற்றுலா விடுதிகளுக்கு இறக்குமதி செய்யும் பாஸ்மதி அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து அரிசி நுகர்வும் உள்ளுர் உற்பத்தியாகும்.

சோளம் உற்பத்தியிலும் தன்னிறைவு எட்டப்பட்டுள்ளது. 'பெசிபிக்' என்ற சோள இனம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து நாம் விலங்கு உணவு தயாரிப்புக்குத் தேவையான அடிப்படை தானியங்களான கௌப்பி, சோயா, சோளம் இவற்றில் தன்னிறைவு எட்டப்பட்டுள்ளது.

அதேபோல் வெங்காய உற்பத்தியிலும் ஆறுமாத காலத்திற்கு தன்னிறைவு என்ற இலக்கும், மிகுதி மூன்று மாதகாலத்திற்கு களஞ்சியப் படுத்தலில் உள்ள அணுகூலங்களைப் பொருத்தும் இறக்குமதியை தவிர்ந்து கொள்ள முடிகிறது.

வெண்மைப் புரட்சி என்ற செயற்திட்டம் ஊடாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஓப் சீசன'; உற்பத்தி அல்லது பருவம் தவிர்ந்த உற்பத்தி என்ற எண்ணக் கரு மூலம் தன்னிறைவிற்கான இலக்கை நோக்கி முன்னேற உள்ளோம்.

மறுபுறமாக உருளைக் கிழங்கு உற்பத்தி தொடர்பாகவும் நுவரெலியாவை மையமாக வைத்து விவசாயப் பணிப்பாளர் ஒருவரின்
மேற்பார்வையில் திட்டங்கள் முன்எடுக்கப்பட்டு வருகின்றன.

இதே அடிப்படையில் மிளகாய் உற்பத்திக்குமான ஒரு புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளது.

அது எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்தப் படும். அது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் சகல விவசாய பரவலாக்கள் உத்தியோகத்தர்களுக்கும் இன்று முதல் அறிவுறுத்தல்கள் இடம்பெற உள்ளன' என்று கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .