2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மேல்கொத்மலை நீர் சுரங்கப்பாதை 21ஆம் திகதி வரை பொதுமக்கள் பார்வைக்கு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர் மின்திட்டத்தின் நீர் சுரங்கப்பாதையினை எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் பார்வையிட முடியுமென மேல்கொத்மலை நீர் மின்திட்டத்தின் பணிப்பாளர் சவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கையின் மிக நீண்ட நீர் சுரங்க பாதையான மேல்கொத்மலை நீர் சுரங்கப்பாதையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 4ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.

அதன் பின்பு  இம்மாதம் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை பெருந்திரளான பொதுமக்கள் இந்த நீர்சுரங்கப்பாதையினுள் சென்று பார்யிட்டு வந்துள்ளனர். மீண்டும் இறுதியாக இந்த நீர் சுரங்கப்பாதையினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நேற்று 17ஆம் திகதி முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீர் சுரங்கப்பாதையினை தலவாக்கலை பிரதான வாயிலின் ஊடாக மாத்திரமே  பொதுமக்கள் பார்வையிட முடியுமென்றும் இந்தச்சுரங்கப்பாதையினை பார்வையிடுவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது எனவும் மேல்கொத்மலை நீர் மின்திட்டத்தின் பணிப்பாளர் சவீந்திர பெர்னாண்டோ மேலும்  தெரிவித்தார்.

இதேவேளை நேற்று இந்த நீர்சுரங்கப்பாதையினை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X