2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

30 ஏக்கர் தோட்ட மக்களுக்கு வீடுகள்

ஆ.ரமேஸ்   / 2019 நவம்பர் 23 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட ஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சேதமடைந்த 24 குடும்பங்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள், திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த தீ விபத்து இடம்பெற்றதையடுத்து, ஒருவருடகாலமாக, போடேஸ் தோட்ட பொது விளையாட்டு மைதானத்திலேயே, 24 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர், வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு, சமூக வலுவூட்டல் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

போடேஸ் தோட்டத்துக்கு, இன்று காலை விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்தார்.

தான் அமைச்சு பொறுப்பை ஏற்றபின்னரான முதல் வேலைத்திட்டமாக, போடேஸ் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பணியை முன்னெடுத்திருப்பதாக இதன்போது அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .