2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோழி வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் கோழிக் குஞ்சுகள் இறக்குமதி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மலையகத்தில்  சிறுகைத்தொழிலாக கோழி வளர்ப்பு தொழிலை முன்னேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து 50 இலட்சம் கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்வதற்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்தள்ளது.

இதன் முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன்னர் 25,000; கோழிக்குஞ்சுகள் இ;றக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.


கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.


கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் கோழி வளர்ப்பு  சுயதொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அத்துடன் மாடுகள், எருமைகள் ஆகியவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .