2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரண்டு அ​மைச்சுகளையும் இ.தொ.கா இழக்கும் அபாயம்

Editorial   / 2018 பெப்ரவரி 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, ஊவா ஆகிய இரண்டு மாகாண சபைகளிலும் தம்வசமுள்ள, இரண்டு அமைச்சுகளையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான் மற்றும் ராமேஸ்வரன் ஆகிய இருவ​ருமே, தங்களுடைய அமைச்சுப்பதவிகளை இழந்துவிடுவர். அதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மிகத் துரிதமாக முன்னெடுத்துள்ளதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியீட்டிய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிநடத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, அந்த மாவட்டத்தில் 11 சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக, அறிவித்துள்ளது.  

அந்த அறிவிப்புத் தொடர்பில், தெளிவுப்படுத்திக் கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆறுமுகன் தொண்டமான் எம்.பிக்கு, ​தொலைப்பேசி அழைப்​பை நேற்றுக்காலை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.  

அவ்வழைப்புக்கு, ஆறுமுகன் தொண்டமான் பதிலளிக்கவில்லை என்றும் அவருக்கு அருகிலிருந்தவர்களில் ஒருவரே பதிலளித்துள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்துள்ளது.  

இந்நிலையிலேயே, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்படி இரண்டு மாகாண சபைகளிலும் இ.தொ.கா வசமுள்ள இரண்டு அமைச்சுகளையும் பறிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .