2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினரின் ’கஷ்டங்களை உணரும் ஜனாதிபதி வரவேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், இராணுவத்தினரின் கஷ்டங்களை அறிந்த ஒருவரே, ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லலித் தவ்லுகல தெரிவித்தார்.

கண்டி, பூஜாப்பிட்டியவில், நேற்று முன்தினம் (07) மாலை இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் இணைந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், பல உறுதிகளை மக்களுக்கு வழங்கிய பின்னரே, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்று கூறிய அவர், அந்த உறுதிகள் எவையும் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்கள், இன்னும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், இவற்றை, அன்றைய அரசாங்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியது என்றும், தற்போது வடக்கின் பல பகுதிகளில், ஆயுதங்கள் மீட்கப்படும் விவரங்கள் தொடர்பில், சரியான தகவல்கள் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகளினால், அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த அவர், வடக்கிலுள்ள 35,000 இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால், அவர்கள், எங்குபோய் இருப்பார்கள் என்பது தொடர்பில், அரசாங்கமே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .