2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இளைஞர்களின் வாக்குகளே ’எமது இலக்கு’

Kogilavani   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், டி.சந்ரு

எதிர்வரும் தேர்தலை அல்லது ஆட்சி மாற்றத்தைப் பற்றி இளைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, தற்போதைய அரசாங்கம், அதற்கான வழியை உருவாக்கும் என்றும், எதிர்வரும் 400 நாள்களில் இலங்கையில் ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனக் கூட்டம், நுவரெலியாவில் நேற்று முன்தினம் (04) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டின் இளைஞர்களை ஏமாற்றும் வகையில், தற்போதைய அரசாங்கம் விடுத்த பொய்யான தேர்தல் விஞ்ஞாபனம் காரணமாகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார் என்று குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம், இளைஞர்களைக் குறிவைத்தும் பெரியோர்களை ஒதுக்கியதாகவும் அமைந்திருந்ததென விமர்சித்த அவர், இதனால், மூவின இளைஞர்களின் 1 இலட்சத்து 50ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போனதெனவும் தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தால், இளைஞர்கள் இப்போது ஏமாற்றப்பட்டுவிட்டனர் என்று அவர் சாடினார்.

“நல்லாட்சி அரசாங்கம், நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தொடருமானால், எதிர்காலச் சந்ததியினருக்கு எதுவும் மிஞ்சாது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இவர்களை ஓடவிட்டுப் பார்த்தோம். ஐந்து வருட ஆட்சிக்கு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, 200 வருடங்களுக்குத் திட்டம் போடுகின்றனர். இது சாத்தியமற்றதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X