2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகமுடிவு பூங்கா சுற்றிவளைப்பு; அபராத தொகையினூடாக ரூ.23 இலட்சம் இலாபம்

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக முடிவு தேசியப் பூங்காவினுள், கடந்த ஒரு வருடத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளினால்,  23 இலட்சம் ரூபாய், அபராதத் தொகையாகப் பெறப்பட்டுள்ளதாக, வன விலங்குகள் திணைக்களத்தின் முகாமையாளரான பிரதீப் தெரிவித்தார்.  

வன விலங்குகளை வேட்டையாடுதல், போதைப் பொருள் பாவனை, புகைத்தல் மற்றும் பூங்காவிலுள்ள இயற்கை வளங்களுக்குத் தீங்கு விளைவித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்தே, அபராதம் பெறப்பட்டுள்ளது.  

இவ்வருடத்தின் முதல் மாதத்தில், சுமார் ஒரு இலட்சம் ரூபாய் அபராதத் தொகையாகப் பெறப்பட்டுள்ளதாக, மேற்படி அதிகாரி தெரிவித்தார்.  

மேலும் உலக முடிவைப் பார்வையிட வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு துண்டுபிரசுரங்களின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனவென்றும் எனினும் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை, சுற்றுலாப் பயணிகள் பின்பற்றுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .