2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எசல பெரஹெராவுக்காக 3,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில்

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்   

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்புக்காக, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனரென, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார்.  

பெரஹெரா காலத்தின் பாதுகாப்பு தொடர்பாக, கண்டியில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது தொடர்ந்துரைத்த அவர், பெரஹெரா காலத்தில், பல இலட்சக் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் கண்டி நகருக்கு வருகைதருகின்றனர் என்றும் எனவே, அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாரைச் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.   

இதேவேளை, பெரஹெராக் காலத்தில் இடம்பெறக்கூடியக் குற்றங்களைத் தடுப்பதற்கும், சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும், அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .