2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எலிக்காய்ச்சலால் 10 பேர் பாதிப்பு

எம்.எம்.எம். ரம்ஸீன்   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் பரவிவரும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, நாவலப்பிட்டி நகரசபை மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச சபை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

நாவலப்பிட்டி பகுதியில், கடந்த சில வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பத்து பேர், நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.   

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சிகிச்சை பெற்றவர்களில் இருவர் விவசாயிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இப்பகுதியில் எலிக்காய்ச்சல் பரவ ஆரம்பித்திருப்பது தொடர்பாக, நாவலப்பிட்டி தொகுதி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சுகாதார அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

இக்காய்ச்சல் டெங்கு நோயை விடவும் அபாயகரமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள், இது தொடர்பாக பொது மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X