2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கேகாலை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா

Kogilavani   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ 
 
கேகாலை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்; 756 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கேகாலை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் குமார் விக்கரமசிங்க தெரிவித்தார்.
 
கேகாலை மாவட்டத்தின் கொவிட் 19 தொற்று ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (14), கேகாலை மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கேகாலை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்தாகவும் மற்றும் இம்மாவட்டத்தில் வீடுகளில் வாழும் 530 பேரும் பின்னவல பிரென்ட்டெக்ஷ் ஆடை தொழிற்சாலையை சேர்ந்த 26 பேரும் உட்பட மொத்தம் 756 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கேகாலை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றை முறியடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .