2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2018 மே 11 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் எல்.ஒ.எல்.சி தோட்டக் கம்பனிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல், இ.தொ.காவின் நுவரெலியா காரியாலயத்தில், நேற்று (10) நடைபெற்றது.  

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தோட்டக் காணியை அபகரித்து விவசாயம் மேற்கொள்வதாகக் கூறி, புரடொப் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து, அவர்களுக்கு எதிராக, நுவரெலியா நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட வழக்கை, வாப்பஸ் பெற்றுகொள்ளுமாறு ஆறுமுகன் தொண்டமான் எம்.பி இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், பணி நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களுக்கு, மீண்டும் தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

இதேவேளை, லில்லிஸ்லேன்ட் பகுதியில், மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுமார் 108 தொழிலாளர் குடும்பங்களுக்கு, வீடமைப்புக்கான காணியை  பெற்றுக்கொடுப்பதுத் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .