2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கலாபொக்க தொழிற்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாபொக்க தேயிலைத் தொழிற்சாலையைப் புதுப்பிப்பதற்கான புதிய இயந்திரங்களை, இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளதுடன் இதனூடாக, மேற்படித் தொழிற்சாலையைப் புனரமைத்து, இரண்டு மாதங்களில் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பன்வில அரச பெருந்தோட்ட நிர்வாகத்துக்கும் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனுக்கும் இடையிலான சந்திப்பு, பன்வில அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில், அண்மையில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படித் தோட்டத்தின் நன்மை கருதி, பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, தோட்டத்தின் ஏ, பீ மலைகள் உட்பட சகல மலைகளிலும், களை நாசினியைப் பாவித்து மலைகளைத் துப்பறவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், சகல மலைகளுக்கும், பசளையிடவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தேயிலைத் தொழிற்சாலைக்குப் பொருத்தமான தொழிற்சாலை அதிகாரி ஒருவரை நியமிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சேவைக்காலப் பணத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு, இம்மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அப்பணத்தை வழங்கவும், தோட்டத் தொழிலாளியான

எஸ்.ராஜலெட்சுமி என்பவர் உயிரிழப்பதற்கு முன்னர், சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  காலத்துக்குரிய வைத்திய விடுமுறைக்கான பணத்தை, அவரது கணவனிடம் கையளிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .