2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்விக்கான நிதி ஒதுக்கீடில் தமிழர்களுக்கு ’1/3 வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில், தமிழர்களுக்கு, மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு கிடைக்கப்பெற வேண்டுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவருமான வே.இராதாகிருஷ்ணனை கௌரவிக்கும் நிகழ்வொன்று, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில், நேற்று முன்தினம் (05) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாட்டிலுள்ள 10,142 மொத்தப் பாடசாலைகளில், மூவாயிரம் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகளாகக் காணப்படுவதாகவும் எனவே, கல்விக்கு வழங்கப்படும் சலுகைகளில் நூற்றுக்கு 30 சதவீதமானவை, தமிழ்ப் பிரிவுக்கு தேவையென்பதால், சமூகத்தின் நலன் கருதி, இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

“இன்று என்னை உலகமே பாராட்டினாலும், என்னை வாழவைக்கும் மலையகச் சகோதர, சகோதரிகளின் பாராட்டை நான் பெரிதாக நினைக்கின்றேன். என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இவ்வாறு நான் பாராட்டுகளைப் பெறுவதற்குக் காரணமான எனது பெற்றோருக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

மத்திய மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், 3,021 ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், பல போட்டிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் எனப் பல உரிமைகளைப் பெற்றுக்கொள்ள, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உந்து சக்தியாக அமைந்தாகவும் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், மலையகத்தில் குறிப்பாக, நுவரெலியாவில், தேசியக் கல்லூரி அமைத்தல், தோட்டங்களில் தரம் 13 வரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தல், ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் நவீனப் பாடசாலைகளை அமைத்தல் எனப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் அதேவேளை, கல்விக்கென அடுத்த வாரம், 500 மில்லியன் ரூபாய் நிதிக்கான வேலைத்திட்டத்தையும் அறிமுகம் செய்வதற்கு, அமைச்சு தயாராகி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .