2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிராம சேவகரை மடக்க முயன்ற கான்ஸ்டபிளுக்குக் கடி

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராம சேவகரை மடக்க முயன்ற கான்ஸ்டபிளுக்குக் கடி உமாமகேஸ்வரி இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, பெண் கிராம சேவகர் ஒருவர் நேற்று  (07) கடித்துக் காயமாக்கியுள்ளார்.

காயமடைந்த கான்ஸ்டபிள், இறக்குவானை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் அவரைக் கடித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இறக்குவானைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெல்மதுளை பகுதியில் கடமை புரிந்து வரும் காவத்தை வத்தேகந்தையைச் சேர்ந்தவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், மேற்குறிப்பிட்ட கிராம சேவையாளர், இறக்குவானைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர், பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டபோது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை திட்டிய குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அன்றைய தினம் அது பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும், தன்னுடைய மற்றொரு தேவைக்காக நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், பொலிஸ் நிலையத்துக்கு வந்த பெண் கிராம சேவகரைக் கைதுசெய்வதற்கு, பொலிஸ் நிலையத்திலிருந்த பெண் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார்.

கிராம சேவகரை மடக்கிப் பிடிப்பதற்கு அவர் முயன்ற வேளை, கான்ஸ்டபின் வலது கையை, கிராம சேவகர் பலமாகக் கடித்துள்ளார். எனினும் மற்றைய பொலிஸாரால், கிராம சேவகர் கைது செய்யப்பட்டதோடு, கடி வாங்கிக் காயமாகிய கான்ஸ்டபிள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .