2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சுற்றுலா கூட்டிச்சென்ற நிர்வாகத்துக்குச் சிக்கல்

Editorial   / 2018 ஜனவரி 03 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலயக் கல்விப் பணிமனையின் அனுமதியைப் பெறாமல், மாணவர்களை, சுற்றுலா அழைத்துச் சென்ற பாடசாலை நிர்வாகம், பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம், ஹட்டன் கல்வி வலயம், கோட்டம்-02க்கு உட்பட்ட  பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. அப்பாடசாலையின் நிர்வாகம், எவ்விதமான முன் அனுமதியையும் பெறாமல் தரம்-09 மற்றும் தரம்-10 மாணவர்களை, டிசெம்பர் 8ஆம் திகதியன்று கொழும்புக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனரென, பெற்றோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை, சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லும் போது, வலயக் கல்விப் பணிமனையில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எனினும், அந்தப் பாடசாலையில் நிர்வாகம் எவ்விதமான அனுமதி​யையும் பெற்றுக்கொள்ளவில்லையென, பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில், ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளா் பி.ஸ்ரீதரனிடம் தொடா்புகொண்டு கேட்டபோது, “அவ்வாறானதொகு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த விவகாரம் தொடர்பில், ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .