2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சேவை மாயமானதால் பயணிகள் திண்டாட்டம்

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்   

இலங்கை போக்குவரத்துச் சபை, கண்டி, பன்வில பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கான அதிகாலை பஸ் சேவை நிறுத்தப்பட்டமைக்கு, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.  

பன்விலையிலிருந்து அதிகாலை 3.50க்கு, கொழும்புக்கான பஸ் சேவை நடைபெற்றது. இதனால், கண்டி வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடுவதற்குச் சென்றவர்கள், கண்டியில் காலையில் நடைபெறும் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், கொழும்புக்குச் சென்று ஒரே நாளில் திரும்பவேண்டியவர்களென பலரும் பெரும் நன்மையடைந்தனர்.   

எனினும், இந்த பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், மலையக அரசியல்வாதிகள் தலையிட்டு உடனடியாக பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்   

மேலும், வத்தேகம பிரதேசத்தில் இருந்து பன்வில வரையான 11 கிலோ மீற்றர் தூரமான வீதியும் பன்விலையிலிருந்து கபரகல மற்றும் கோமரை பிரதேசம் நோக்கிச் செல்லும் வீதியும் புனரமைப்பின்றி காணப்படுவதால், இவ்வீதிகள் வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   

எனவே, இவ்வீதிகளை புனரமைத்துத் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .