2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழர்கள் புறக்கணிப்பு; ஐ.தே.கவிலிருந்து 300 பேர் விலக தீர்மானம்?

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாநகர சபையில், திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களுக்கான நலன்புரிச் சேவைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மேற்படி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் சுமார் 300 ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், எதிர்வரும் தேர்தல்களைப் புறக்கணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநகர சபையில், தமிழ் ஊழியர்கள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள், வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போது, நகர மேயர், தகாத வார்த்தைப் பிரயோகங்களால், அவர்களைத் திட்டித்தீர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நகர மேயர் மற்றும் பிரதி மேயருக்கு இடையிலான முரண்பாட்டினாலே​யே, இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மாத்தளை - நாகொல்ல பகுதியில், மாநகர சபையில் தொழில்புரியும் தமிழர்களும் கழுதாவளை பகுதியில் வசிக்கும் மக்களுமே, இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலைமை, தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில், அவர்கள் அடுத்து நடக்கவிருக்கும் தேர்தல்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .