2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துண்டுப் பிரசுரம் விநியோகம்

ஆ.ரமேஸ்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலைக் கொண்ட புதிய வாழ்வுக்காகப் போராடுவோம்” எனும் தொனிப்பொருளில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலானத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, உடப்புஸ்ஸல்லாவை, இராகலை ஆகிய நகரங்களில், நேற்று (06) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்கப் பிரிவான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து, துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டன.

இதன்போது, மேற்படி நகரங்களை அண்மித்து அமைந்துள்ள தோட்டங்களுக்கும் துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தோட்டத்தில் தொழிலாளர்களின் இன்றைய வாழ்வு நிலைத் தொடர்பாகவும் அந்த மக்களின் வாழ்வு முன்னேற்றத்துக்காக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிதிக் காரியதர்சி கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலை, மக்கள் விடுதலை முன்னணி உருவாக்கும் என்றுக் கூறிய அவர், புதிய வாழ்வுக்கானப் போராட்டத்துக்காக, அழைப்பு விடும் இலக்கைக் கொண்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X